'நீளமான' கம்புகளால்... மாணவர்களை கொடூரமாகத் 'தாக்கும்' போலீஸ்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 13, 2019 11:36 PM

தலைநகர் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களை போலீசார் நீளமான கம்புகளை வைத்து அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

delhi police beaten college students, twitter reacts

இந்தநிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள் டெல்லியில் போராடியதாகவும், அதனை ஒடுக்க போலீசார் அவர்களை அடித்ததாகவும் இதுகுறித்து கூறப்படுகிறது. இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.

மாணவர்களை போலீசார் தாக்குவது தவறான செயல் என்றும், இது உண்மையில் மிருகத்தனமாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் டெல்லி போலீசாரை வறுத்தெடுத்து வருகின்றனர்.