VIDEO: ‘சூரிய கிரணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை’!.. காரணம் இதுதானா..? வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 26, 2019 05:58 PM

சூரிய கிரணத்தின் போது தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் உலக்கை செங்குத்தாக நின்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Solar Eclipse traditional method of making the plunger stands

30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வமான சூரிய கிரகணம் இன்று (26.12.2019)  காலை 8 மணி முதல் 11.19 மணி வரை உலகம் முழுவதும் நிகழ்ந்தது. தமிழகத்தை பொருத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 93% சதவீதம் சூரிய கிரணம் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பகுதி அளவு தெரியும் எனவும் தெரிவித்தனர். மேலும் இன்று தெரியும் சூரிய கிரகணம் மீண்டும் அதே இடத்தில் தெரிய 350 ஆண்டுகள் ஆகும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய முறையாக கடைபிடிக்கப்படும் தண்ணீர் பாத்திரத்தில் உலக்கையை நிற்க வைக்கும் வழக்கம் பல்வேறு இடங்களில் கடைபிடிக்கப்பட்டது. அதில், சூரிய கிரகணம் தொடங்கியதும் தண்ணீர் பாத்திரத்தில் உலக்கை செங்குத்தாக நிற்க வைக்கப்படுகிறது. பின்னர் சூரிய கிரகணம் முடிவடைந்ததும் தானாகவே உலக்கை கீழே விழுகிறது. இது சூரிய கிரகணம் ஆரம்பித்து எப்போது முடிவடைகிறது என்பதை கண்டுபிடிக்க முன்னோர்கள் பின்பற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூளூர் பகுதியில் இதுபோன்று உலக்கையை தண்ணீர் பாத்திரத்தில் நிற்க வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #VIRAL #SOLARECLIPSE #PLUNGER