‘30 வருஷம் கழிச்சு வரும் சூரிய கிரகணம்’!.. தமிழகத்தில் இந்த 3 இடத்துல மட்டும் நல்லா தெரியும்..! மிஸ் பண்ணிறாதீங்க..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 26, 2019 10:20 AM

தமிழகத்தில் சூரிய கிரகணம் எங்கு, எவ்வளவு நேரம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Last solar eclipse of decade visible from parts of TamilNadu

30 வருடங்களுக்கு பின் நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிய தொடங்கியுள்ளது. இந்த சூரிய கிரகணம் காலை 11.19 மணி வரை தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை இந்த கிரகணத்தை ஒரு இடத்தில் பார்த்தால் மீண்டும் அதே இடத்தில் கிரகணகத்தை பார்ப்பதற்கு 350 ஆண்டுகள் ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக தெரியும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துகுடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பகுதி அளவிலான சூரிய கிரகணம் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : #SOLARECLIPSE2019 #SOLARECLIPSE