'இந்த பொம்பள புள்ளைங்களே இப்படித்தான்'...'அப்படி தானே மக்களே'?...வைரலாகும் வாவ் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 23, 2019 10:29 AM

இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று பலரது இதயத்தையும் கவர்ந்துள்ளது. யாருக்காவது சின்ன கவலை இருந்தாலும் அது அனைத்தயும் இந்த வீடியோ மறக்கடிக்க செய்யும் என்பதில் நிச்சயம் மாற்று கருத்து இருக்க முடியாது.

Viral video of Girl baby talking about his dad will melt your heart

தாய் ஒருவர் தனது பெண் குழந்தையிடம் கேக்கும் கேள்வி தான் அந்த வீடியோவில் ஹைலைட். வீடியோவில் இருக்கும் குழந்தையிடம், உனக்கு சாப்பாடு ஊட்டுவது யார் என கேட்கிறார், அதற்கு அந்த குழந்தை அம்மா என பதில் சொல்கிறது. அதனைத்தொடர்ந்து உனக்கு துணி யார் போட்டு விடுகிறார் என கேட்கிறார், அதற்கு அம்மா என பதில் சொல்கிறது. இப்படி குழந்தைக்கு தாய் செய்யும் அனைத்தையும் கேட்கிறார். அதற்கு எல்லாம் அம்மா என்றே பதில் சொல்கிறது.

இறுதியாக உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என கேட்கிறார். அதற்கு அந்த குழந்தை ''அப்பா'' என சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரிக்கிறது. நிச்சயமாக பார்க்க கண் கோடி வேண்டும் என தோன்ற வைக்கும் அளவிற்கு இந்த வீடியோ உள்ளது. அது என்னவோ தெரியல பெண் பிள்ளைகளுக்கு அப்பா தான் உலகம் என பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

Tags : #FACEBOOK #KIDS #VIRAL #GIRL BABY #DAD