'லுங்கி, கையில மண்வெட்டி'...'ஒரே பாட்டுல ட்ரெண்டான விவசாயி'...வைரலாகும் ஹிட் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Dec 18, 2019 09:07 AM
ஜஸ்டின் பீபரின் பேபி பாடலை பாடி, பலரை கவர்ந்ததோடு வேற லெவெலில் ட்ரெண்டாகி இருக்கிறார் விவசாயி ஒருவர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
90-ஸ் கிட்ஸ்களின் ஆஸ்தான பாப் பாடகர் தான் ஜஸ்டின் பீபர். சிறு வயதிலேயே தனது பாடல்களால் உலகமுழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தவர். இன்றைய பள்ளி, கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் கூட அவரது பாடல் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவிற்கு இன்றைய தலைமுறை இளைஞர்களையும் கவர்ந்தவர். இப்படி எங்கு திரும்பினாலும் ஒலிக்கும் ஜஸ்டினின் பாடல், எங்கோ மண் வெட்டி பிடித்து விவசாயம் பார்க்கும் விவசாயியையும் ஈர்த்திருப்பது நிச்சயம் ஜஸ்டின் பீபரின் தாக்கம் என்றே சொல்லலாம்.
ஜஸ்டின் கடந்த 2009 ஆண்டு பாடிய பேபி பாடல் அவரின் பெஸ்ட் பாடல் பட்டியலில் முதலிடம் பிடிக்கக் கூடியது. அந்த பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். தற்போது அந்த பாடலை கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பாடி, ஜஸ்டின் பீபரைப் போல் நடனமும் ஆடுகிறார். விவசாயம் செய்து வரும் பிரதீப் என்கிற 26 வயதான பிபிஏ பட்டதாரி இளைஞர், ஆங்கிலப் பாடல்கள் மட்டுமல்ல சீனா, ஜப்பான் ஆகிய மொழிப் பாடல்களையும் சரளமாக பாடும் திறன் கொண்டவர்.
இதில் ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால் பிரதீப் ஆங்கிலத்தில் குறைவான திறன் கொண்டவர். பட்டப் படிப்பிலும் ஆங்கிலத் தேர்வில் தோல்வியுற்றவர். இருப்பினும் அவருக்கு ஆங்கிலப் பாடல்கள் மீது பற்று அதிகம். அவரது ஊர் மக்களும் அவர் என்ன பாடுகிறார் என்பது புரியாவிட்டாலும், அவர் பாடுவதை ரசிப்பதோடு அவரை உற்சாகப்படுத்தவும் தயங்குவது இல்லை.
பிபிஏ படித்திருந்த போதிலும் தனது அப்பா விவசாயத்தை வவிட்டு விட கூடாது என்று சொன்ன ஒரு காரணத்திற்காக கர்நாடகத்தின் ஹிரியூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். வேலையின் போது களைப்பு தெரியாமல் இருக்க காதில் இயர் ஃபோன்கள் சொருகிக் கொண்டு இதுபோன்ற ஆங்கிலப் பாடல்களை கேட்டு கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பது அவரது வழக்கம். அவர் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.