காதலனின் ‘திருமணத்தை’ நிறுத்த... 2 வயது ‘குழந்தையை’ பிடித்து... இளம்பெண் செய்த ‘நடுங்க’ வைக்கும் காரியம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 19, 2019 01:12 PM

காதலனின் திருமணத்தை நிறுத்துவதற்காக அவருடைய அக்காவின் 2 வயது குழந்தையைக் கொலை செய்த இளம்பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Punjab Girl Kills Baby In Washing Machine To Stop Lovers Marriage

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் மன்பிரீத் கவுர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞருக்கு வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதால் அவர் மன்பிரீத் கவுரை விட்டுப் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் காதலனின் திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்காக அந்த இளைஞரின் அக்கா தன் குழந்தை ஆதிராஜுடன் அவருடைய வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது 2 வயது குழந்தையான ஆதிராஜ் மற்றும் சில குழந்தைகள் மன்பிரீத் கவுருடைய வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். பின்னர் மற்ற குழந்தைகள் வீடு திரும்பி நீண்ட நேரமாகியும் ஆதிராஜ் மட்டும் திரும்பாததால், குழந்தையைக் காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்தபோது, மன்பிரீத் கவுர் வீட்டிற்குள் விளையாடச் சென்ற 3 குழந்தைகளில் ஆதிராஜ் மட்டும் வெளியே வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மன்பிரீத் கவுரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தன்னை கைவிட்ட காதலனின் திருமணத்தை நிறுத்துவதற்காக குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டுக் கொலை செய்ததாகக் கூறியுள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ந்துபோன போலீசார் உடனடியாக வாஷிங் மெஷினில் இருந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து மன்பிரீத் கவுர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காதலனின் திருமணத்தை நிறுத்துவதற்காக இளம்பெண் ஒருவர் 2 வயது குழந்தையைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #LOVER #MARRIGAE #WASHINGMACHINE #BABY