‘வாக்கிங் சென்ற அரசியல் பிரமுகருக்கு நடந்த பயங்கரம்’!.. மதுரையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 19, 2019 07:26 PM

மேலூர் அருகே வாக்கிங் சென்ற அமுமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN AMMK member murdered near Melur in Madurai

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியை சேர்ந்த அமுமுக பேரூர் கழக பொறுப்பாளரும், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவருமான அசோகன், தனது நண்பர்களுடன் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அசோகனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அசோகனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் கொலை நடந்த இடத்தில் கிடந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர்தான் அமுமுக பேரூர் கழக பொறுப்பாளராக அசோகன் நியக்கமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.