தமிழக 'முதல்வருக்கே' பிறப்பு 'சான்றிதழ்' இல்லை... 'எடப்பாடி' பழனிசாமி என்னிடம் கூறியுள்ளார். 'சீமானின்' 'நான்ஸ்டாப்' அதிரடி...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 09, 2020 07:17 AM

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று என்னிடம் கூறியுள்ளார் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Seeman said that C.M told me that he had no birth certificate

திருச்சியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்.பி.ஆருக்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என என்னிடமே கூறியுள்ளார். நம் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கூட பிறப்புச்சான்றிதழ் இருக்காது. அப்படி இருக்க எப்படி இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் பிறப்பு சான்றிதழை சமர்ப்பிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

சிஏஏ சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கு எதிரானது. இந்தச் சட்டத்தில் இருக்கும் நடைமுறையால் ஒட்டுமொத்த மக்களே முகாமுக்கு செல்ல வேண்டிய நிலைதான் வரும் என்றும் சீமான் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிற்குள் இனிமேல் அகதிகளாக வருபவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் எனக் கூறலாமே தவிர, ஏற்கனவே வந்தவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் என்பது, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தரமாட்டோம் என கூறுவது பாசிசம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags : #EDAPPADI PALANISAMI #SEEMAN #TRICHI #CAA #BIRTH CERTIFICATE