"கூட்டத்தில் சவுண்டு கொடுக்கணும்..." "விசில் அடிக்கணும்..." "யாராவது ஓவரா பேசுனா கல்லை விட்டு எறியணும்..." "அவர்தான் அதிமுக காரர்..." அமைச்சரின் 'அதிரடி' பேச்சு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 28, 2020 11:00 PM

அதிமுகவினர் யாரும் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Minister rajendrabalaji speech about who is admk party member

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், சிஏஏவால் இஸ்லாமியர்கள் தமிழகத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என முதலமைச்சர் சட்டப்பேரவையில் கேட்டதற்கு ஸ்டாலின் பதில் கூறாமல் வெளிநடப்பு செய்ததாக குறிப்பிட்டார்.  சிஏஏ குறித்து சட்டப்பேரவைக்குள் பேசாமல், பேரவைக்கு வெளியே ஸ்டாலின் பேசுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுகவினர் யாரும் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் கிடையாது. எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர்கள். கூட்டத்தில் சவுண்டு கொடுக்கணும், விசில் அடிக்கணும், யாராவது ஓவரா பேசுனா கல்லை விட்டு எறியணும். அவர்தான் அதிமுககாரர். அவர்கள் அப்படித்தான் வீரமாக இருப்பார்கள். கைகட்டி அமைதியாக உட்கார்ந்திருக்க அவர்கள் என்ன காங்கிரஸ்காரர்களா?" எனப் பேசினார். 

மதக்கலவரம் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ரஜினியே கூறியிருக்கிறார். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். முதல்வரும் அதற்கு தயாராகத்தான் இருக்கிறார் என அமைச்சர் தெரிவித்தார்.

Tags : #MINISTER #RAJENDRABALAJI #ADMK #CAA #RAJINIKANTH