”நித்தியானந்தா தான் எனது ரோல் மாடல்...” ”200 கோடி செலவில் 20 தீவு வாங்கப் போறேன்...” 'சீமானின்’ அடுத்த ’அதிரடி’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 28, 2020 08:20 AM

நித்தியானந்தாவை தனது ரோல்மாடல் என்று அறிவித்துள்ள சீமான், அவரை போல 200 கோடி ரூபாய் கொடுத்து 20 தீவுகளை வாங்கி, ஆங்கில கலப்பின்றி பேசும் தூய தமிழர்களை அங்கு குடி அமர்த்த போவதாக தெரிவித்துள்ளார்.

Nityananda is my role model, I am going to buy 20 islands-seeman

நாம் தமிழர் கட்சியின் இணையதளபாசறைக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அபபோது ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களுக்கு தாம் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் அடி கிடைக்கும் என எச்சரித்தார்.

தொடர்ந்துபேசிய அவர் நித்தியானந்தாவை தனது ரோல் மாடல் என்றும் அவரை பின்பற்றி 200 கோடி ரூபாய் செலவில் 20 தீவுகளை விலைக்கு வாங்கி அங்கு தூய தமிழர்களை குடி அமர்த்த போவதாகவும் தெரிவித்தார்

ரஜினி குறித்து இழிவாக சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவர் கர்நாடகா அல்லது மஹாராஷ்ட்ரா சென்று கட்சி தொடங்கினால் வாழ்த்தி பேச தயாராக இருப்பதாகவும் சீமான் கூறியுள்ளார்.

Tags : #SEEMAN #NITHYANANDA #20 ISLAND #TAMILIANS