சரக்கு ஆட்டோவில் கடத்திச் சென்று... முள் காட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிர்ச்சியடைந்த காவலாளி...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பெண்ணை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே அடர்ந்த முள்காடு பகுதி உள்ளது. இந்த இருட்டான பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் ஆட்கள் நடமாட்டம் இருக்காது. இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மிகவும் சோர்வான நிலையில் அங்கு உள்ள ஒரு செராமிக்கடை அருகில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கே வந்த காவலாளி அந்த பெண்ணிடம் விசாரித்தார்.
அப்போது அந்த பெண் தன்னை 2 பேர் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும், அதனால் தனக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு மயக்கமாக இருப்பதாகவும் சோர்வுடன் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த காவலாளி காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்று அந்தப் பெண்ணை மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் லிடியா என்பது தெரிய வந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் நேற்று இரவு திருச்சி ஜங்ஷனில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணை 2 பேர் சரக்கு ஆட்டோவில் கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது.
குற்றவாளிகளின் அடயாளங்களை லிடியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதனைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
