"முருகன், சிவன்-பார்வதியின் மகன் என்பதே கட்டுக்கதை..." "சிவனுக்கும், பார்வதிக்கும் எந்த தொடர்பும் இல்லை..." 'ட்விஸ்ட்க்கு' மேல் ட்விஸ்ட் கொடுக்கும் 'சீமான்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்முருகன், சிவன்-பார்வதியின் மகன் என திரைக்கதை எழுதி அனைவரையும் நம்ப வைத்துள்ளனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

சென்னையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமான், நடிகர் ரஜினி குறித்து பேசினார். சரபோஜி மன்னர் காலத்தில் மராட்டியர்கள் படையெடுத்து வந்து எங்கள் மூதாதையர்களை வென்று, ஆட்சி செலுத்தியது போல், நீங்கள் மக்களாட்சி காலத்தில் படமெடுத்து வந்து எங்களை ஆள நினைப்பது சரியல்ல எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், முருகன், சிவன்-பார்வதியின் மகன் என்பதே கட்டுக்கதை என்றும், சிவனுக்கும், பார்வதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.
முருகன் காலம் வேறு, சிவன் காலம் வேறு. சிவன்-பார்வதியை முருகனுக்கு தாய்-தந்தை என கூறி நம்ப வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், சிவனுக்கு முருகனை மகனாக்கி சினிமா கதையை விட மிகப் பெரிய திரைக்கதை அமைத்துவிட்டனர் என்றும் குற்றம்சாட்டினார்.
இதேபோல், கண்ணன் குறித்து அவர் பேசுகையில், "கண்ணன் நீல நிறமா, கருப்பு நிறமா என இப்போது வரை பலருக்கு குழப்பம் உள்ளது. காரை திருடிச் சென்று நிறத்தை மாற்றுவது போல், கருப்பான கண்ணனை திருடிச் சென்று, நீல நிற வண்ணம் அடித்து விட்டனர். நீல நிறம் என்பது வடக்கில் இருந்து திணிக்கப்பட்டது" என்ற புதிய தகவலை குறிப்பிட்டார்.
