“மண்சோறு சாப்பிடும் ரஜினி ரசிகர்களுக்கு இத கொடுக்கலாமே?” - சீமானின் அடுத்த சர்ச்சை பேச்சு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 29, 2020 08:20 AM

ரஜினியை வைத்து மத்திய அரசு நாடகம் ஆடுவதாக மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

NTP Seeman latest speech and advise for rajini fans

மேலும் ரஜினி நடித்த அத்தனை படங்களும் வன்முறை படங்கள் என்றும், ஆனால் வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று ரஜினி புத்தி சொல்வதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, ‘துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளி என்று சொன்ன ரஜினி, மண்சோறு சாப்பிடும் தனது ரசிகர்களுக்கு அறிவு வர துக்ளக் வாங்கி கொடுக்கட்டும்’ என்று கூறினார்.

குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பழனிபாபா பற்றி பேசிய சீமான், பழனிபாபாவை தீவிரவாதியாக ஏற்கக் கூடாது என்று முதலில் முழங்கிவிட்டு, அடுத்த சில நொடிகளிலேயே பழனிபாபாவை போல தானும் ஒரு தீவிரவாதிதான் என்றும் கூறினார்.

பின்னர், நாங்கள் தீவிரவாதிகள் என்றும் கையை உயர்த்தி பகிரங்கமாக அறிவித்தார்.  இறுதியில் பழனிபாபாவை கருத்தால் வீழ்த்தியிருந்தால் அவன் தீவிரவாதி என்றும் அவரை வெட்டி வீழ்த்திய செயல்தான் தீவிரவாதம் பயங்கரவாதம் என்றும் முடித்தார்.