‘தம்பி.. அன்பு’!.. கண்ணீர் விட்டு கதறி அழுத சீமான்.. சோகத்தில் உறைந்த தொண்டர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 09, 2020 10:15 AM

உடல்நலக்குறைவால் உயிரிழந்த சீமானின் கார் டிரைவர் அன்புசெழியனின் உடலைப் பார்த்து சீமான் கதறி அழுதார்.

Seeman crying for his car driver anbuchezhiyan death

நாகப்பட்டிணம் மாவட்டம் எருக்கூர் அருகே உள்ள தில்லைபட்டிணம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அன்புசெழியன். இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். உடல்நிலைகுறைவு காரணமாக சொந்த ஊருக்கு சென்று அன்புசெழியன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து அன்புசெழியன் வீட்டுக்கு சென்ற சீமான், அவரது உடலைப் பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவர் அழுவதைப் பார்த்த அவரது தொண்டர்களும் கண்ணீர் விட்டனர். பின்னர் இறுதிச்சடங்கு வரை அங்கேயே இருந்து அன்புசெழியனின் உடலை சுடுகாட்டு சீமான் சுமந்து சென்றார்.

சீமானுக்கு கார் டிரைவராக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு பாதுகாவலானவும், உதவியாளராகவும், தம்பி போல் அன்புசெழியன் இருந்ததாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #SEEMAN #NAAMTAMILARKATCHI #CRYING