பிறந்தநாள் பார்ட்டி.. வகுப்பறைக்கு 'பீர்' பாட்டில்களுடன் வந்த மாணவி..ஆசிரியர் 'திட்டியதால்' தற்கொலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 18, 2019 10:17 PM

தனது பிறந்தநாளுக்கு பீர் பாட்டில்களுடன் வந்த மாணவியை ஆசிரியர் திட்டியதால், மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சேலம் பகுதியை அதிர வைத்துள்ளது.

School Student Suicide in Salem district, Police Investigate

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,'' சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் கல்பனா. (பெயர் மாற்றம்). இவர் நங்கவள்ளியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார். கடந்த 15-ம் தேதி கல்பனாவுக்குப் பிறந்தநாள் என்பதால் பீர் பாட்டில்களை வாங்கிவந்து வகுப்பறையில் அனைத்து மாணவிகளிடமும் காட்டியிருக்கிறார்.

அப்போது வகுப்பு ஆசிரியர் வர, கல்பனாவுடன் சேர்ந்து 5 மாணவிகளும் மாட்டிக்கொண்டனர். இதுகுறித்து வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்க, கல்பனாவுக்கு பிறந்தநாள் என்பதால் எங்களுக்கு பார்ட்டி கொடுக்க பீர் பாட்டில்களுடன் வந்தாள் என தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து கல்பனாவின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து அவர்கள் முன்னால்  கல்பனாவை ஆசிரியர்கள் மோசமாகத் திட்டியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்பனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர்கள் இரவோடு இரவாக அவரது உடலை எரித்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி விஏஓ காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, தற்போது போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.

Tags : #SALEM