‘பூட்டு உடைந்து’... ‘பின்பக்க சுவரில் துளையிட்டு'... 'அதிர்ந்துபோன மக்கள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 18, 2019 09:11 PM
திருத்தணி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், நடந்த கொள்ளை முயற்சி சம்பவம், அங்குள்ள கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர்.கே. பேட்டை புதூர் மேட்டில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள், சிறுக சிறுக சேமித்த பணம் மற்றும் விவசாயத்திற்காக வாங்கிய நகைகளை அடமானம் இங்கு வைத்துள்ளனர். இந்நிலையில், நள்ளிரவில் வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள், நகை மற்றும் பணம் உள்ள இடத்திற்கு செல்ல முயன்றுள்ளனர்.
ஆனால், அங்கு செல்ல முடியாத காரணத்தினால், வங்கியின் பின்பக்க சுவரை துளையிட்டு, முயற்சி செய்துள்ளனர். அதிலும் தோல்வி ஏற்பட்டதையடுத்து, வங்கியில் கொள்ளையடிக்காமல் தப்பியோடியுள்ளனர். காலையில், வங்கி பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உடனடியாக வங்கிச் செயலாளரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து உடனடியாக ஆய்வு நடத்தியதில், 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் பத்திரமாக இருப்பது தெரியவந்தது.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடியில் பதிவாகியுள்ளது. இதையடுத்து காவல்துறைக்கு அளித்த தகவலின்பேரில், வந்து ஆய்வு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.