IPL 2020: 'கோப்பையை' வென்ற கையோடு... 'திருமண' பந்தத்தில் நுழைந்த இளம்வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடந்து முடிந்த ரஞ்சிக்கோப்பை தொடரில் சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக அற்புதமாக செயல்பட்ட இளம்வீரர் உனத்கட் தற்போது திருமண பந்தத்தில் நுழைந்து இருக்கிறார்.

Welcome to the family Rinny. I am so glad that my brother @JUnadkat has found the love of his life. 🤗
P:S - You have to deal with a lot of bromance pic.twitter.com/X9aZxFfm0o
— cheteshwar pujara (@cheteshwar1) March 15, 2020
இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஜெயதேவ் உனத்கட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்தியளவில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்றாக கருதப்படும் ரஞ்சி தொடரில் சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக உனத்கட் விக்கெட் வேட்டை நிகழ்த்தி புதிய சாதனை படைத்தார். இவரது தலைமையில் சவுராஷ்டிரா அணி இறுதிப்போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
6 hours, 2 meals & 1 shared mud cake later.. 💍❤️ pic.twitter.com/SEvHFDQwru
— Jaydev Unadkat (@JUnadkat) March 15, 2020
இந்த நிலையில் தற்போது உனத்கட் திருமண பந்தத்தில் நுழைந்து இருக்கிறார். அவருக்கு பின்னி என்ற பெண்ணுடன் நிச்சயம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து உனத்கட்டின் நண்பரும், கிரிக்கெட் வீரருமான புஜாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்தி இருக்கிறார். இதேபோல ராஜஸ்தான் அணியும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறது. விரைவில் இருவரது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jaydev Unadkat c & b Rinny
Congratulations @JUnadkat on getting engaged. 💍🍾#HallaBol | #RoyalsFamily https://t.co/9XB0RbpHXv
— Rajasthan Royals (@rajasthanroyals) March 15, 2020
