‘ஒரு வழியா சாமியும் புல்லட்ல வந்தாச்சு’.. தலையில ‘ஹெல்மெட்ட’ நோட் பண்ணீங்களா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 22, 2019 12:15 PM
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, புல்லட்டில் ஹெல்மெட் அணிந்து உலா வந்த முருகப் பெருமானின் ஊர்வலம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘சாமியே சைக்கிளில் வரும்போது, பூசாரிக்கு புல்லட் கேக்குதா?’ என்றொரு பழமொழி உண்டு. இதற்கு மாறாக தற்போது சாமியும் புல்லட் ஓட்டியபடி வீதி உலா வரும் புதிய வைபோக உற்சவம் அரங்கேறியுள்ளது. பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர தினத்தன்று பௌர்ணமி நிலவொளி வீசும் நாளில், பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம்.
புதுச்சேரி மாநிலத்தில், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமி தரிசன திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு அங்கமாக ஸ்ரீ முருகப்பெருமான் புல்லட் வாகனத்தில் வீதி உலா வரும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
அதுவும் புல்லட்டில் வந்த முருகன், பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்தபடி வீதியுலா வந்தது பக்தர்களிடையே மகிழ்ச்சியையும் கலகலப்பையும் விழிப்புணர்வையும் உண்டாக்கியது. கன்னியர் விரதம் என்கிற பெயரில் ஆண், பெண் இருவரும் இந்த தினத்தன்று, விரதம் கடைபிடித்தால், விரைவில் திருமணம் ஆகும் என்கிற ஐதீகத்தால் இந்த திருவிழா வருடாவருடம் நிகழ்கிறது. இந்த தினத்தில் முருகப் பெருமான் புல்லட்டில் ஹெல்மெட் அணிந்தபடி வீதி உலா வந்தது இணையத்தில் வைரலாகியது.