'போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து'.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 31, 2019 05:26 PM

இலங்கை கிரிக்கெட் விரர் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sri Lankan cricketer arrested after traffic accident

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக திமுத் கருணாரத்னே இருந்து வருகிறார்.முன்னதாக நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி வென்று சாதனை படைத்தது. இதனை அடுத்து உலகக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு கேப்டனாக நியமிக்க பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுத் கருணாரத்னே இன்று அதிகாலை கொழும்பு, கின்சி சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, வெரல்லா என்ற பகுதியில் ஆட்டோ ஒன்றின் மீது மோதியுள்ளார். இதனால் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை அடுத்து போலிஸார் விசாரித்ததில் கருணாரத்னே போதையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Tags : #CRICKET #PLAYER #ACCIDENT #ARRESTED