'நீ யாருக்கும் கிடைக்க கூடாது'...'பொள்ளாச்சி மாணவி' கொலையில்...அதிரவைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 08, 2019 10:34 AM

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிரவைக்கும் காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

Spurned Lover Arrested For Pollachi college girl murder case

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகள் பிரகதி. கோவை அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார்.திருமணம் நிச்சயக்கப்பட்டு, அதற்காக முகூர்த்தப்பட்டு எடுக்க வீட்டிற்கு கிளம்பிய அவர்,வீட்டிற்கு வராததால் பதறிய பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் உள்ள பூசாரிப்பட்டி என்ற பகுதியில் உள்ள வாய்கால்மேட்டில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக்கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்,கோவையில் காணமால் போன  பிரகதி என்பது உறுதியானது.

இதனிடையே கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.காவல்துறையினரின் தீவிர விசாரணையில்,மாணவியின் உறவினர் சதீஷ் குமார் கைது செய்யப்பட்டார்.அவர் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கைது செய்யப்பட்ட  சதீஷ் குமார் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன். வட்டித் தொழில் செய்து வந்துள்ளார். கொல்லப்பட்ட மாணவியும், சதீஷ்குமாரும் உறவினர்கள் என்பதால் சிறு வயது முதலே இருவருக்குள்ளும் நன்கு அறிமுகம் இருந்துள்ளது.

இதனால் சில வருடங்களுக்கு முன்பு, மாணவியின் பெற்றோரிடம் சதீஷ்குமார் பெண் கேட்டுச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் வேறொரு பெண்ணை சதீஷ்குமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 2 வயதில் மகள் இருக்கிறாள்.இருப்பினும் மாணவி பிரகதியுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த மாணவிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதர்த்தம் நடைபெற்றுள்ளது.இது சதீஷ் குமாருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது

.இதனிடையே  கடந்த வெள்ளிக்கிழமை மாணவியை சந்தித்த சதீஸ்,தனது காரில் பிரகதியை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்  இந்த சூழலில் பூசாரிபட்டி அருகே சென்ற போது, திருமணம் தொடர்பாக,இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த அவர் ''எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்க கூடாது'' என சரமாரியாக பிரகதியை குத்தி கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் உடலின் பல இடங்களில் சரமாரியாக குத்திய சதீஸ்,உடலை அருகிலிருந்த புதருக்குள் வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.

தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் செல்போன் பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளி சதீஸ் குமாரை கைது செய்துள்ளனர்.நன்கு அறிமுகமான உறவினரே மாணவியை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #COIMBATORE #PRAGATI