‘நான் நல்லா தூங்கிட்டு இருந்தேன்’.. ‘அப்போதான் அந்த தகவல் வந்தது’.. மனம் திறந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 30, 2019 01:18 PM

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் வீரர் ராகுல் சஹார் மனம் திறந்துள்ளார்.

Rahul Chahar reveals reaction after earning maiden India call up

இந்திய அணி சுற்றுப்பயணமாக வெஸ்ட் இண்டீஸ் சென்று 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ராகுல் சஹார், நவ்தீப் சைனி, கலீல் அஹமது போன்ற இளம் வீரர்களுக்கு இடம் கிடைந்திருந்தது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இளம்வீரர் ராகுல் சஹார் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்தது குறித்து மனம் திறந்த ராகுல் சஹார், ‘நான் அன்று நன்றாக தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய போன் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. உடனே எழுந்து போனை எடுத்துப் பார்க்கையில் ஒரே வாழ்த்து மேசேஜ்-ஆக இருந்தது. அதன் பின்னர்தான் நான் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதை அறிந்தேன். திடீரென இந்திய அணியில் இடம் கிடைத்த செய்தி வந்ததால் என்ன செய்யதென்றே தெரியவில்லை. நிச்சயம் கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்த முயற்சி செய்வேன்’ என டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #BCCI #INDVWI #RAHULCHAHAR