'ஒருத்தர் இல்ல 2 பேர் இல்ல.. 959 பேர்'.. EXAM சரித்திரத்துலயே இப்படி நடக்கல.. வைரல் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jul 19, 2019 02:06 PM
ஈ அடிச்சான் காப்பி என்று சொல்வார்கள். தேர்வில் ஒருவர் எழுதியதை அப்படியே பார்த்து எழுதுவது. தேர்வறைகளில் நிகழும் முக்கியமான விதிமீறல்தான் காப்பி அடிப்பது. அதில் முன்னாள் இருப்பவர் தேர்வுத்தாளில் வந்து உட்காரும் ஈ-யை அடித்தால் கூட பின்னால் இருப்பவரும் அவ்வாறே செய்யும் அளவுக்கு காப்பி அடித்தலை மிகைப்படுத்திச் சொல்லும் வாக்கியம்தான் இது.
இதில் சரியாக எழுதும் மாணவரை பார்த்து எழுதுபவரும் சரியாக எழுதுதல், மற்றும் தவறாக எழுடும் மாணவரைப் பார்த்து எழுதுபவரும் தவறாக எழுதுதல் போன்ற விநோதங்கள் நடக்கும். விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், ஒரே மாதிரி தவறுகளை சொல்லிவைத்தாற்போல் எழுதும் மாணவர்களை கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் அப்படி ஒரு தேர்வில் 5 பேர் சிக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட 1000 பேர் என்றால் நம்ப முடிகிறதா?
அப்படித்தான் குஜராத்தில் நடைபெற்ற தேர்வுகளில் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில், மாணவர்கள் 959 பேர் ஒரே மாதிரியான பதில்களையும், சொல்லிவைத்தாற்போல் ஒரே தவறுகளையும் அடிமாறாமல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 63 பள்ளிகளில் இருந்து தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை பரிசோதித்ததில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
அதிலும் ஜீனகத் மற்றும் கிர் சோம்நாத் மாவட்டங்களில் 200 பேர் ஒரே கட்டுரையை அடிமாறாமல் எழுதியுள்ளனர். விசாரணையில் மாணவர்கள் மாஸ் காப்பி அடித்ததும், அவர்களுக்கு ஆசிரியர்களே விடைத்தாள்கள் தந்து உதவியதும் தெரியவந்ததை அடுத்து, குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் அத்தனை மாணவர்களையும் பெயில் போட்டுள்ளதோடு, இந்த மாணவர்களின் மொத்த ரிசல்ட் வெளியீட்டையும் 2020 கல்வியாண்டு வரை தள்ளிப் போட்டு குஜராத் கல்வி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.