‘அரசு நீட் தேர்வு பயிற்சி மையம்’... 'ஒருவருக்குகூட அரசு மருத்துவப் படிப்பில் இடம் இல்லை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 21, 2019 01:57 PM

தமிழக அரசின் சார்பில் நடத்திய, நீட் தேர்வு பயிற்சி மையங்களில் படித்த எந்தவொரு மாணவருக்கும், இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

TN Gov Coach centres Students fail to get gov medical seats

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு, நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், நீட் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற ஏதுவாக, அரசு சார்பில் நீட் பயிற்சி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 412 சிறப்பு மையங்களை அமைத்து, 19,355 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் இதில் ஒரு மாணவருக்கு கூட, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர இந்தாண்டு, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, கட்ஆப் மதிப்பெண் 474 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு சார்பில் நடத்தப்படும் நீட் பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களின் முதல் மதிப்பெண்ணே 440 தான் ஆகும். எனினும் கடந்த ஆண்டை விட இந்த முறை நீட் தேர்வில், 300-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.