"7 வயசுலயே அப்பா, அம்மாகிட்ட நான் சொன்னேன்".. 21 வருஷம் கழிச்சு சாதித்த சஞ்சு.. ரஜினியை நேரில் சந்தித்த வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய அணியின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரராக இருப்பவர் சஞ்சு சாம்சன். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் அதிரடியாக ஆடி ரன் குவிக்கக் கூடிய சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners
அவ்வப்போது இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் சிறப்பான முறையில் அதை பயன்படுத்தி ரன் குவிக்கவும் செய்வார் சஞ்சு சாம்சன்.
அதிரடி வீரர் சஞ்சு சாம்சன்..
ஐபிஎல் தொடரில் விளையாடும் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் கடந்த சீசனில் செயல்பட்டிருந்தார். அவரது தலைமையில் ராஜஸ்தான் அணி, சுமார் 13 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும், 2008 ல் நடந்த முதல் ஐபிஎல் தொடருக்குப் பிறகு கடந்த ஆண்டு நடந்த இறுதிப் போட்டிக்கு தான் அந்த அணி முன்னேற்றம் கண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners
கடந்த ஆண்டை போல, இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் அணியை சிறந்த முறையில் வழிநடத்தி, கோப்பையை வெல்ல சஞ்சு சாம்சன் தீவிரம் காட்டுவார் என்றும் ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.
ரஜினியை சந்தித்த சஞ்சு சாம்சன்..
இந்த நிலையில், இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்துக் கொண்டது தொடர்பான வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. சஞ்சு சாம்சன் சிறு வயது முதலே தீவிர ரஜினி ரசிகராக இருந்து வருகிறார். இதனை பல பேட்டிகளிலும் கூட அவர் குறிப்பிட்டுளளார்.
Images are subject to © copyright to their respective owners
அப்படி ஒரு சூழலில் தான், தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றி உள்ளார் சஞ்சு சாம்சன். அதன்படி, சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் சஞ்சு சாம்சன். இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சஞ்சு சாம்சன், இதற்கு முன்பு தான் தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகன் என சில பேட்டிகளில் பேசிய வீடியோக்களை எடிட் செய்து அதனுடன் தற்போது சந்தித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் இணைத்து அதனை பகிர்ந்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
7 வயசுலயே தீவிர ரசிகன்..
மேலும் தனது கேப்ஷனில், "நான் 7 வயதிலிருந்தே தீவிர ரஜினி ரசிகன் ஆகிவிட்டேன். அப்போது ஒரு நாள் நான் ரஜினி சாரை அவர் வீட்டிற்கு போய் சந்திப்பேன் என பெற்றோரிடம் நான் கூறியிருந்தேன். சுமார் 21 வருடங்களுக்கு பின், தலைவர் என்னை அழைத்த பிறகு அந்த நாள் வந்து விட்டது" என மிகவும் நெகிழ்ச்சியாக சஞ்சு சாம்சன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
