ஆளுநர் இல.கணேசன் இல்ல விழா.. ஸ்டைலாக வந்திறங்கிய நடிகர் ரஜினிகாந்த்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் சகோதரரின் பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் சதாபிஷேக விழா சென்னை கோடம்பாக்கத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மேற்குவங்க ஆளுநர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அதன்பின்னர் அங்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், மற்றும் டிஆர் பாலு ஆகியோரை இல. கணேசன் உள்ளே அழைத்துச் சென்றார்.
இதனிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு வந்தபோது செண்டை மேளத்தை ரசித்து பார்த்தார். பின்னர், இசைக் கலைஞர்களுடன் இணைந்து அவரும் செண்டை மேளத்தை இசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
ஒரே நேரத்தில் இரு மாநில முதல்வர்கள், நடிகர் ரஜினிகாந்த், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ஆகியோர் பங்குபெற்றதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மற்ற செய்திகள்
