"தலைவரை எப்படியாவது பார்த்துடனும்".. பாகிஸ்தானை கலக்கும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்.. வைரல் PICS..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல்களை செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், ரஜினியை நேரில் சந்திக்க மிகவும் விருப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக திரையுலகத்தை சேர்ந்தவர்களை போல உருவ ஒற்றுமை கொண்டவர்கள் பற்றிய செய்தி எப்போதும் வைரலாகிவிடுவது உண்டு. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி போல உருவ ஒற்றுமை கொண்ட பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரின் செயல்பாடுகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அதன்பிறகு வெற்றிப் படிக்கட்டில் பயணிக்க துவங்கிய ரஜினிகாந்த் தற்போது இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக அறியப்படுகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படமான ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ரஹ்மத் காஷ்கோரி எனும் பாகிஸ்தானை சேர்ந்த நபர். பலோசிஸ்தான் மாநிலத்தின் குவெட்டா நகரத்தை சேர்ந்த இவருக்கு 62 வயதாகிறது. இவர் பாகிஸ்தானில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து தனது வீடியோக்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வந்திருக்கிறார். அப்போது பலரும் நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி போலவே இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்ததாக கூறுகிறார் ரஹ்மத்.
இதுபற்றி அவர் பேசுகையில்,"பணியில் இருந்தபோது நான் ரஜினி போல இருப்பதை உணரவில்லை. வேட்டைக்கு செல்லும்போது வீடியோக்கள் எடுத்து பகிரும்போது தான் பலரும் அதை சுட்டிக்காட்டினார்கள். என்னால் ரஜினிகாந்த் போல நடிக்க முடியாது. ஆனால், இந்தியாவின் மிக முக்கிய நடிகரான ரஜினி போன்ற முகத்தோற்றம் எனக்கு கிட்டியது கடவுளின் அருள் என்றே சொல்லுவேன். ஒருமுறை கராச்சியில் உள்ள மாலுக்கு சென்றிருந்தேன். அப்போது சிலர் என்னை சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முயற்சித்தனர். அப்போது சிலர், நீங்கள் ரஜினிகாந்தா? எனக் கேட்டனர். நான் ஆம், ஆனால் நான் பாகிஸ்தானை சேர்ந்தவன் எனக் கூறினேன்" என்றார்.
மேலும், ரஜினி போலவே சிகை அலங்காரம், உடை தேர்வு ஆகியவற்றை மேற்கொள்ளும் ரஹ்மத்திற்கு இன்னொரு ஆசையும் இருக்கிறது. சூப்பர் ஸ்டாரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் அது. இதனிடையே, இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
