RAJINIKANTH : “அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு”.. அமைச்சர் உதயநிதிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Dec 14, 2022 12:48 PM

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இதனையடுத்து அவருக்காக தமிழக தலைமை செயலகத்தில் புதிய அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Actor Rajinikanth wishes for TN Minister Udhayanidhi Stalin

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்மையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக அவர் மீண்டும் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்திருந்தார்.

இதற்கு மத்தியில், கடந்த ஒரு சில தினங்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிட முதல்வர் முக.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்ததாகவும் இதுகுறித்து ஆளுநருர் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. பின்னர் தமிழக அரசு அதனை உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில், உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சரான உதயநிதிக்கு பல பிரபலங்களும் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், “வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இது தொடர்பான தமது வாழ்த்துக் குறிப்பில் “தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Also Read | “இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்.. கடைசி படம் இதுதான்!”  — உதயநிதி பரபரப்பு பேட்டி

Tags : #UDHAYANITHI STALIN #RAJINIKANTH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor Rajinikanth wishes for TN Minister Udhayanidhi Stalin | Tamil Nadu News.