BEHINDWOODS EXCLUSIVE: நடிகை மீனா பங்குபெற்ற MEENA 40 CELEBRATION-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. இன்னும் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க ..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 05, 2023 11:51 PM

90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மீனா நடித்துள்ளார்.

Meena 40 Event Rajinikanth boney kapoor other celebrities

குழந்தை நட்சத்திரமாகவும் & கதாநாயகியாகவும் ரஜினி, கமல், அஜித், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என தமிழ் மொழியிலும் இது தவிர தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் மீனா, ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Meena 40

சமீபத்தில் தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகை மீனா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தொடர்ந்து தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் பகிர்ந்து வரும் சூழலில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மீனா, திரை உலகில் கால் பதித்து தற்போது 40 ஆண்டுகள் நிறைவாகி உள்ளது.

Meena 40 Event Rajinikanth boney kapoor other celebrities

இந்த நிலையில், 40 ஆண்டுகள் சினிமா உலகில் நடிகை மீனா நிறைவு செய்ததையொட்டி Behindwoods சார்பில் Meena 40 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Meena 40 Event Rajinikanth boney kapoor other celebrities

இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் போனி கபூர், கலைப்புலி எஸ். தாணு, ராஜ்கிரண், குஷ்பு, இசை அமைப்பாளர் தேவா, நாசர், பிரபுதேவா, ஸ்னேகா, ரோஜா, சுஹாசினி, ராதிகா, ப்ரீத்தா ஹரி, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

 

 

Tags : #RAJINIKANTH #MEENA #BONEY KAPOOR #MEENA 40 #RAJKIRAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Meena 40 Event Rajinikanth boney kapoor other celebrities | Tamil Nadu News.