போன வாரம் வெச்சு செஞ்ச பூஜா குடும்பம்.. திரும்ப மேடை வந்ததும் டிஜே பிளாக் செஞ்ச சம்பவம்.. "மனுஷன் நொந்து போய்ட்டாரு போல!!"

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 12, 2023 08:53 PM

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். இதன் ஒன்பதாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூழலில், அனைத்து போட்டியாளர்களும் மிக சிறப்பாக பாடி வருகின்றனர்.

DJ Black songs and dialogues after pooja entry super singer 9

                                                             Images are subject to © copyright to their respective owners

ஒரு பக்கம் பாடல்கள் என இருந்தாலும் மறுபக்கம், தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் அடிக்கும் காமெடிகளும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவை அனைத்திற்கும் நான் சளைத்ததில்லை என்பது போல டிஜே பிளாக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

அனைவருக்கும் மிக சிறப்பாக பொருந்தும் வகையில் பாடல்கள் மற்றும் வசனங்கள் உள்ளிட்டவை டைமிங்கில் டிஜே பிளே செய்து பட்டையைக் கிளப்புவார். அதிலும் பூஜாவிற்கு அவர் போடும் காதல் பாடல்கள் மற்றும் ரொமான்டிக் வசனங்கள் இணையத்தில் ட்ரெண்ட் அடிக்க கூடியவை.

கடந்த  வாரம், சூப்பர் சிங்கர் 9 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள பூஜாவின் பெரியம்மா, பூஜாவுக்கு டிஜே பிளாக் போடும் பாடல்கள் தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி சற்று விமர்சன ரீதியாக கருத்துக்களையும் முன் வைக்க, இதன் காரணமாக டிஜே பிளாக் மற்றும் அங்கிருந்து அனைவரும் சற்று பதறிப் போகவும் செய்கிறார்கள்.

DJ Black songs and dialogues after pooja entry super singer 9

Image Credit : Vijay Television

இறுதியில் டிஜே பிளாக் மன்னிப்பு கேட்டு கொண்டிருந்த சூழலில் கடைசியில் இது பிராங்க் என அவரை தட்டிக் கொடுத்து உண்மையை உடைக்கவும் செய்கிறார் பூஜாவின் பெரியம்மா. தனது பாடல்கள் மற்றும் வசனங்களை போட்டு அனைவரையும் கலாய்க்கும் டிஜே பிளாக், இந்த பிராங்கின் காரணமாக ஒரு நிமிடம் அப்படியே நிலைகுலைந்து போனார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனிடையே இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்பாக ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பூஜா பாட வரும் போது, "மறக்குமா நெஞ்சம், மனசில சலனம்" என்ற பாடலை டிஜே பிளாக் போட்டு, கடந்த வாரம் நடந்த சம்பவத்தை குறிப்பிடுகிறார்.

DJ Black songs and dialogues after pooja entry super singer 9

Image Credit : Vijay Television

அது மட்டுமில்லாமல், தொடர்ந்து ஜிபி முத்து பேசும் வசனமான "ஏன் இப்படி அசிங்கப்படுத்திவிட்டே. என்னை. வீட்ல ஒரே சண்டை, கண்டமேனிக்கு ஏச்சு வருது" என்ற ஒரு வசனத்தையும் டிஜே பிளாக் ஒலிபரப்புகிறார். இதனைக் கேட்டு பூஜா உள்ளிட்ட அனைவரும் சிரிக்கவும் ஆரம்பிக்கின்றனர். "போன வாரம் உங்க பெரியம்மா பண்ணதெல்லாம் அவன் லைஃப் எப்படி இருக்கு தெரியுமா?" என பிரியங்கா பூஜாவிடம் கேட்கிறார்.

உடனே "உங்க அப்பாவ பார்த்தாலும் பயம், உங்க அம்மாவை பார்த்தாலும் பயம்" என்ற பாடலும் ஒலிக்க, அந்த இடம் இன்னும் கலகலப்பாக மாறுகிறது. இதன் பின்னர் பேசும் பூஜா, "அவருக்கு நடந்தது மட்டும் யோசிக்குறீங்க. அவங்க ஃபேன்ஸ் எல்லாம் என்ன திட்டுனாங்க தெரியுமா?. எப்படி அவர கஷ்டப்படுத்தலாம் அப்படின்னு கேட்டாங்க. நான் டிஜே பிளாக்கிட்ட ஒரு தடவை சாரி சொல்லிக்கிறேன் ரசிகர்களுக்காக" என சொன்னதும், "அம்மான்னு அவன் அம்மாவை கூப்பிடவே பயப்படுறான் தெரியுமா?" என பிரியங்காவும் கிண்டலாக குறிப்பிடுகிறார்.

DJ Black songs and dialogues after pooja entry super singer 9

Image Credit : Vijay Television

அந்த சமயத்தில், "அதை வேற ஞாபகப்படுத்திட்டிங்க, நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு தம்பி" என்ற சிங்கமுத்து வசனத்தையும் சூழ்நிலைக்கேற்றது போல, டிஜே பிளாக் போட்டுவிட அரங்கமே இன்னும் ஒரு படி மேலே போய் அதிர்கிறது.

 

 

Tags : #DJ BLACK #POOJA #SUPER SINGER SEASON 9

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. DJ Black songs and dialogues after pooja entry super singer 9 | Tamil Nadu News.