“எனக்கு அந்த ஸ்லாங் வேணும்..!”.. படையப்பாவில் 5 முறை ரெக்கமெண்ட் செய்த ரஜினி .. அனுமோகன் நெகிழ்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, ராதாரவி, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்த திரைப்படம் படையப்பா.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | 9 பேருடன் கல்யாணம்.. எல்லார்கிட்டயும் சொன்ன ஒரே பொய்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்த திரைப்படத்தில் படையப்பா என்கிற ஒரு நபர் தன் உழைப்பால் உயர்ந்து சமூகத்தில் பெரிய ஆள் ஆவதும், குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தினர் மத்தியில் பெருந்தன்மையுடனும் மதிப்பும் மரியாதையுடனும் வாழ்வதும் ஒரு பக்கம் சொல்லப்பட்டிருக்கும். இன்னொருபுறம் படையப்பா மீது ஆசைப்படும் நீலாம்பரியையும் அவரால் தன் குடும்பத்திற்கு ஏற்படும் சிக்கல்களையும் சமாளித்து வெற்றி கொண்டு வாழும் படைப்பா என்கிற நபரின் கதையுமாக சொல்லப்படும்.
இதில் நீலாம்பரி கேரக்டரில் வரும் ரம்யா கிருஷ்ணனுடன் நடிகர் அனுமோகன் முக்கிய கதாபாத்திரத்தில் கோவை கொங்கு வட்டார மொழியில் பேசி நடித்திருப்பார். இவர் அண்மையில் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது படைப்பா படத்தில். “பாம்பு புத்துகுள்ள கையை விட்டது எப்படி” என்று ரஜினிகாந்திடம் பேசும் வசனம் பற்றி விவரித்தார்.
அதன்படி விஐபி என்கிற திரைப்படத்தில் அனுமோகன் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தின் பிரிவியூ ஷோ பார்க்க வந்த ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தில் கொங்கு வட்டார மொழி பேசி நடித்த அனுமோகனை ரசித்திருக்கிறார். அதன் பிறகு அனுமோகனிடம் அந்த வட்டார வழக்கில் பேச சொல்லி ரஜினி கேட்க அவரும் பேசி காண்பித்திருக்கிறார். இதை கேட்ட ரஜினி, தனது அடுத்த படத்தில் அனுமோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லி வாக்கு தந்துவிட்டு சென்றுள்ளார்.
Image Credit : vijay television
அதன் பின்னர் படையப்பா திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் அனுமோகனை நடிக்க வைக்க வேண்டும் என்று சுமார் ஐந்து முறை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் நினைவூட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். இதனைக் கேட்டபின் கே.எஸ்.ரவிக்குமார் அனுமோகனை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்திருக்கிறார். அப்போது மைசூரில் ஷூட்டிங் இருப்பதாகவும், அனுமோகனை படையப்பா படப்பிடிப்புக்கு ரஜினி சொன்னதாகவும் சொல்லி வர சொல்லி இருக்கிறார் கே.எஸ். இதை கேட்டு அங்கு சென்ற அனுமோகனுக்கு ரஜினிகாந்துடனான ஒரு காட்சிக்கு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
ரஜினிகாந்த், பாம்பு புற்றுக்குள் கையை விட்டு பாம்பு எடுப்பது போன்ற அந்த காட்சியில் அதைப்பற்றி ஏதாவது கேளுங்கள் என்று அனுமோகனிடம் ரஜினி கேட்க அதற்கு அனுமோகனும் பேசி காண்பித்திருக்கிறார். அப்போது ரஜினி, “அந்த ஸ்லாங்கில் பேசுங்கள்” என்று அன்று விஐபி பட ப்ரிவியூ ஷோவில் அனுமோகன் பேசிய கொங்கு வட்டார மொழியை நினைவூட்ட, அப்போது இன்னும் ‘ர’ன எழுத்தை அழுத்தமாக உச்சரித்த அனுமோகன், “ஏனுங்க இந்த பாம்பு புத்துக்குள்ள கையை விட்டீங்களே பாம்பு கடிச்சிராதுங்களா” என்று தனக்கே உரிய கோவை கொங்கு வட்டார மொழியில் பேசி இருக்கிறார். அனைவருக்கும் பிடித்து விட்டது. ரஜினிகாந்த் கைதட்டினார். இதை விஜய் டிவியில் சொல்லி நினைவூட்டிய அனுமோகன் ரஜினிகாந்தின் இந்த செயல் குறித்தும் நெகழ்ச்சி அடைந்து பேசியிருக்கிறார்.
Also Read | “நம்ம வெச்சு கொன்னியே.. எல்லாமே பொய் தானா”.. காதலர் தினத்தில் ஹிப் ஹாப் தமிழாவின் வைரல் பாடல்..

மற்ற செய்திகள்
