ரொம்ப நாளைக்கு அப்புறம்... சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ரஜினிகாந்த் .. ஃபோட்டோ பகிர்ந்து ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் பிரபலமான ரஜினிகாந்த், பின்னர் தமது 47 வருட திரைப்பயணத்தில், பல சாதனைகள் படைத்துள்ளார். ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, ஹீரோயிஸம், வில்லத்தனம் உட்பட நடிகர் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். உலகம் முழுக்க பல ரசிகர்களால் கொண்டாட படும் நடிகர் ரஜினிகாந்த், 2019 ஆம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், திரைத்துறையின் உயரிய சாதனை விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார்.
ஸ்டைலிஷ் மற்றும் கமர்சியல் நடிகராக திரை உலகில் 70-கள் தொடங்கி முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி இருந்த அண்ணாத்த திரைப்படம் கடைசியாக வெளியாகி இருந்தது. இதில் ரஜினியுடன் 80 மற்றும் 90-களில் நடித்த மீனா, குஷ்பு ஆகிய நடிகைகளும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினில் நடிக்கிறார். இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இதில் ரஜினிகாந்த், கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த், நடிகராக இருந்தபோதிலும் அரசியல் பிரபலங்களுடனும் எப்போது மரியாதையான நல்லுறவை கொண்டவர். அதன் நிமித்தமாக தற்போது தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல் மந்திரியுமான சந்திர பாபு நாயுடுவை சந்தித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக தாம் பதிவிட்டுள்ள ட்வீட்டில் நடிகர் ரஜினிகாந்த், “மிக நாண்ட நாளுக்கு பின்.. எனதருமை நண்பர் மரியாதைக்குரிய சந்திரபாபு நாயுடு அவர்களுடன் மறக்க முடியாத தருணம் செலவிட முடிந்தது .. அவர் பூரண உடல்நலத்துடனும், அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியுடனும் திகழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.