‘அதை கொடுங்க’.. சென்னை ஏர்போர்ட்டில் ரசிகர் போர்த்திய பொன்னாடை.. காரில் ஏறும்முன்பு கேட்டுவாங்கிய ரஜினி! ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம் டெலிவிஷன் டிஆர்பி ரேட்டிங்கில் வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்கிய போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள் அவருக்கு பொன்னாடை போற்றி வரவேற்றனர். அப்போது ரசிகர்களை பார்த்து எப்படி இருக்கீங்க என்று ரஜினிகாந்த் கேட்டதும் ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சி பெருக்கில் குஷி ஆகிவிட்டனர்.
இதனிடையே காரில் ஏறிச் செல்லும் முன்பு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களால் தனக்கு போற்றப்பட்ட அந்த பொன்னாடையை கேட்டு வாங்கி தன்னுடைய காரில் பத்திரப்படுத்தி எடுத்துக் கொண்டு சென்றார். மேலும் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளையும் அவர் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏர்போர்ட்டில் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
