ஜூடோ ரத்னம் மறைவு..."மறக்க முடியாத சரித்திரம்".. அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனராக இருந்த ஜூடோ ரத்னம் நேற்று காலமான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

Also Read | பிரியவே கூடாதுன்னு.. ஒரே ஆணை கரம்பிடித்த இரட்டை சகோதரிகள்.. கடைசில இப்படி ஒரு சிக்கல் வந்திடுச்சே..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பிறந்தவர் ஜூடோ ரத்னம். இவர் தனது சினிமா பயணத்தை ஒரு நடிகனாக ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர், ஜெய்சங்கர் நடித்திருந்த வல்லவன் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி கலைஞர் ஆகவும் அறிமுகமாகி இருந்தார் ஜூடோ ரத்னம்.
இதனைத் தொடர்ந்து, 70 மற்றும் 80 களில் கொடிக் கட்டிப் பறந்த நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் ஏராளமான படங்களுக்கு சண்டைப் பயிற்சியையும் ஜூடோ ரத்னம் கற்றுக் கொடுத்துள்ளார். அதிலும் நடிகர் ரஜினிகாந்திற்கு மட்டும் சுமார் 46 படங்கள் சண்டைப் பயிற்சி இயக்குனராக இருந்துள்ளார். சுமார் 1200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளாராக பணியாற்றியதால் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் ஜூடோ ரத்னம் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் ஜூடோ ரத்னம் பெற்றுள்ளார்.
தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கூட ஏராளமான படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குனராக ஜுடோ ரத்னம் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில், தனது 93 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் ஜூடோ ரத்னம் நேற்று அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் காலமானார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியன் சங்க அலுவலகத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூடோ ரத்னம் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது," எஸ்பி முத்துராமன் சார் இயக்கி நான் நடித்த அனைத்து படங்களிலும் ஜூடோ ரத்னம் சார் தான் சண்டை பயிற்சியாளர். தனக்கென ஒரு ஸ்டைலை அவர் உருவாக்கிக்கொண்டார். சுப்பராயன், தர்மா போன்ற அவருடைய சிஷ்யர்கள் பலர் மிகப்பெரிய சண்டை பயிற்சியாளர்களாக மாறியுள்ளனர். கதாநாயகன் மற்றும் ஃபைட்டர்களின் பாதுகாப்புக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாரு. ரொம்பவே மென்மையான மனிதர். முரட்டுக்காளை படத்துல அந்த ட்ரெயின் ஃபைட்டை யாராலும் மறக்க முடியாது. சண்டை பயிற்சியாளர்கள் மத்தியில் அப்படி ஒரு நபரை பார்ப்பது அபூர்வம். சரித்திர சாதனை படைத்து, பூரண வாழ்க்கை வாழ்ந்து 93 வயதில் காலமாகி இருக்கிறார். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்" என்றார்.
Also Read | "எங்க ஊருக்கு விமானத்தை திருப்புங்க".. கோபத்துல இளைஞர் செஞ்ச காரியம்.. பரபரப்பான ஏர்போர்ட்..!

மற்ற செய்திகள்
