RAJINIKANTH: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. புனித் ராஜ்குமாருக்காக கர்நாடக அரசு விழாவில் .. வெளியான வைரல் புகைப்படங்கள்.. முழு தகவல்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.
![Rajnikanth arrives in Bengaluru to attend 67th Kannada Rajyotsava Rajnikanth arrives in Bengaluru to attend 67th Kannada Rajyotsava](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/rajnikanth-arrives-in-bengaluru-to-attend-67th-kannada-rajyotsava.jpeg)
Also Read | 5 நாளைக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை.. ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்.. முழு விபரம்..!
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் இரண்டு புதிய படங்களின் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றுள்ளார். கர்நாடக அரசின் 67வது கன்னட ராஜ்யோத்ஸவ் நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது அளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றுள்ளார். இந்த நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு நடிகர் ஜூனியர் என்டிஆர், இன்ஃபோசிஸ் சுதா மூர்த்தி ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | ட்விட்டரில் BlueTick -க்கு பணம் கட்டணுமா?.. வெடித்த சர்ச்சை.. எலான் மஸ்க் கொடுத்த பரபர பதில்..!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)