"இது எல்லாம் தெரிஞ்சும் கடவுள் இல்லன்னு சொல்றாங்க".. ரஜினி சொல்லி முடிச்சதும் கைத்தட்டலால் அதிர்ந்த அரங்கம்!!..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இதற்கு முன்பு, அண்ணாத்த திரைப்படம், கடந்த 2021 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரை அரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
Images are subject to © copyright to their respective owners
இதனைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தை தொடர்ந்து, மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.
இதனையடுத்து, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், த.செ. ஞானவேல் இயக்கத்திலும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தமாகி உள்ளது.
இதனிடையே, சென்னையில் சமீபத்தில் நடந்த தனியார் மருத்துவமனை ஒன்றின் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசி இருந்தார்.
அப்போது தான் அரசியல் வராமல் போனதற்கான காரணம் குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசியிருந்த நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததாகவும் தனது உடலில் பிரச்சனைகள் இருந்ததால் மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொண்டதன் பெயரில், வெளியே கூட்டத்தில் சல்லவோ, மாஸ்க் இல்லாமல் வெளியே செல்லவோ கூடாது என்றும் மருத்துவர் அறிவுறுத்தியதை பற்றி பேசி இருந்தார்.
Images are subject to © copyright to their respective owners
கடவுள் இல்லன்னு சொல்றாங்க..
இதன் பெயரில் தான் பின்னர் அரசியலுக்கு வர வேண்டாம் என முடிவு எடுத்ததாகவும் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்திருந்தார். மேலும் இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், நமது இதயம் லப்டப் லப்டப் என சுமார் 70 முதல் 80 வயது வருடம் வரை அடித்துக் கொண்டிருப்பதாகவும் எந்த விஞ்ஞானி, ஆய்வாளர்களாவது இப்படி ஒரு மெக்கானிசத்தை செய்ய முடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதே போல நமது உடலில் ரத்தம் மற்றும் செல்கள் ஓடுவது குறித்தும் பேசியிருந்த நடிகர் ரஜினிகாந்த், ஒரு துளி ரத்தத்தையாவது இங்கே இருக்கும் விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் யாராவது செய்ய முடியுமா என்றும் கேட்டிருந்தார். தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், "இதெல்லாம் தெரிஞ்சுருந்தும் சில பேர் கடவுள் இல்லைன்னு சொல்றாங்க. அதை எல்லாம் பார்த்த சிரிக்குறதா இல்லையான்னு தெரியல" எனக் கூறியதுமே அரங்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டத் தொடங்கி விட்டனர்.