RAJINIKANTH IN SHIVARATRI : மகா சிவராத்திரி விழாவில் மனைவியுடன் கலந்துகொண்டு தியானம் செய்த நடிகர் ரஜினிகாந்த்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதாவுடன் சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்டு தியானம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
![Rajinikanth attends Shivaratri in presence of Gurudev Rajinikanth attends Shivaratri in presence of Gurudev](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/rajinikanth-attends-shivaratri-in-presence-of-gurudev.jpg)
Image Credit : Swami Advaithananda / @ArtofLiving
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்,‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது மங்களூருவில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் மங்களூருவில் இருந்து பெங்களூருவில் உள்ள 112 அடி உயர ஆதியோகி மையத்திற்கு சென்று தனது அண்ணன் சத்தியநாராயணனுடன் வழிபாடு நடத்தியதாக தெரிகிறது. இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது அண்ணனுடன் காரில் சென்ற புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
Image Credit : Swami Advaithananda / @ArtofLiving
குறிப்பாக குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்தி வரும் மகா சிவரத்திரி விழாவில் தனது மனைவி லதாவுடன் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், அங்கு அமர்ந்தபடி தியானம் செய்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
Image Credit : Swami Advaithananda / @ArtofLiving
நாடு முழுவதும் மகா சிவராத்திரியில் பல பூஜைகளும் விசேஷங்களும் ஆன்மீக நிகழ்வுகளும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)