"அதுக்குள்ள ஒரு மாசம் ஆயிடுச்சு".. பிரசவ நேரத்தில் நடந்தது என்ன?.. அஜய் கிருஷ்ணா மனைவி பகிர்ந்த உணர்வுபூர்வமான வீடியோ!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 12, 2023 07:44 PM

விஜய் டிவியில் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயம் ஆனவர் அஜய் கிருஷ்ணா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அஜய் கிருஷ்ணா, தனது வசீகர குரல் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி கொண்டார். அதே போல, பிரபல பாடகர் உதித் நாராயணன் குரலில் அஜய் கிருஷ்ணா பாடுவது இன்னும் அவரை புகழ் பெற வைத்திருந்தது.

Ajay Krishna wife jessy share video on her delivery

                                                                  Images are subject to © copyright to their respective owners

இதனிடையே, சமூக வலைத்தளம் மூலம் தனக்கு பிரபலமான ஜெஸ்ஸி என்ற பெண்ணுடன் பழகி வந்த அஜய் கிருஷ்ணா, நாளடைவில் அவரை காதலிக்கவும் தொடங்கி உள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி வந்த சூழலில், பின்னர் திருமணமும் செய்து கொண்டனர்.

அப்பாவான அஜய் கிருஷ்ணா

இதனைத் தொடர்ந்து, தனது பிறந்த நாளில் தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடனும் பகிர்ந்து இருந்தார் அஜய் கிருஷ்ணா. தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி ஜெஸ்ஸியுடன் இணைந்து போட்டோ சூட் நடத்தியது தொடர்பான புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வந்தார் அஜய்.

மிகப்பெரிய அளவில் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகவும் செய்திருந்தது. இதனால், விரைவில் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொண்டது குறித்த தகவலையும் வெளியிடுவார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

Ajay Krishna wife jessy share video on her delivery

Images are subject to © copyright to their respective owners

ஒரு மாசம் ஆச்சு..

அப்படி இருக்கையில், கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி, அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றையும் அஜய் கிருஷ்ணா வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்ஸி ஆகியோருக்கும், அவரின் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில், தங்களின் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆனதையொட்டி அஜய் கிருஷ்ணாவின் மனைவி ஜெஸ்ஸி பகிர்ந்துள்ள வீடியோ, அதிக கவனம் பெற்று வருகிறது.

மனைவி ஜெஸ்ஸி பகிர்ந்த வீடியோ..

இது தொடர்பான வீடியோவில், பிரசவத்திற்கு முன்பாக தான் சந்தித்த கஷ்டங்களையும் குழந்தை பெற்றெடுத்த பின்னர் அதனுடன் உணர்வுபூர்வமாக கொஞ்சும் புகைப்படங்கள் உள்ளிட்ட விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மேலும் தனது கேப்ஷனில், "எங்களின் வாழ்க்கையில் நீ வந்து ஒரு நாள் ஆவது போல உணர்கிறேன். ஆனால், அதற்குள் ஒரு மாதமாகி விட்டது. எங்கள் மகிழ்ச்சி மற்றும் மேஜிக்கின் சிறிய பொக்கிஷம் நீ. உனக்கு சிறந்த ஆரோக்கியத்தை கடவுள் தருவார். தயவு செய்து சீக்கிரம் வளர்ந்து விடாதே" என குறிப்பிட்டுள்ளார்.

Ajay Krishna wife jessy share video on her delivery

Images are subject to © copyright to their respective owners

ஒரு குழந்தை என்பது அவரது பெற்றோரது வாழ்வில் கிடைக்கும் மிக முக்கியமான பொக்கிஷம் ஆகும். அதே போல, அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெஸ்ஸி ஆகியோரும் தங்களுக்கு பிறந்த குழந்தையை மிகவும் அசத்தலாக கவனித்தும், செல்லம் கொஞ்சி வருவதும் பலர் கவனத்தையும் பெற்றுள்ளது.

Tags : #AJAY KRISHNA

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ajay Krishna wife jessy share video on her delivery | Tamil Nadu News.