மேட்ச்ல இல்லாத நிலையிலும்.. சஞ்சு சாம்சன் செய்த விஷயம்.. ஹீரோ லெவலுக்கு கொண்டாடும் ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி தற்போது மழை காரணமாக முடிவு தெரியாமல் பாதியிலேயே கைவிடப்பட்டது.

டி 20 உலக கோப்பைத் தொடரை முடித்த கையுடன் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்த நிலையில், டி 20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடருக்கு முறையே ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதில், முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை இந்திய கிரிக்கெட் அணி 1 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில், டாம் லதாம் சதமடித்து அசத்தி இருந்தார். அவரும் கேப்டன் வில்லியம்சனும் 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் சேர்க்க, நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி சமீபத்தில் நடந்தது. இந்த போட்டி மழை காரணமாக இரண்டு முறை நிறுத்தப்பட, தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் போட்டியும் கைவிடப்பட்டது.
இரண்டு போட்டிகளுக்கு பிறகு நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கும் நிலையில், கடைசி ஒரு நாள் போட்டி, நவம்பர் 30 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் இரண்டாவது போட்டிக்கு இடையே செய்த விஷயம், ரசிகர்கள் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருந்தார். ஆனால், டி 20 தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்கி இருந்தார். ஆனால், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மீண்டும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
முதல் போட்டியில் நிதானமாக ஆடி ரன் சேர்த்த போதிலும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரையும் கேள்வி எழுப்பியும் வந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இரண்டாவது ஒரு நாள் போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கு மத்தியில் சஞ்சு சாம்சன் செய்த விஷயம், அதிக கவனம் ஈர்த்து வருகிறது. மழை பெய்ததன் காரணமாக, மைதான ஊழியர்கள் மைதானத்தை மூட தார்பாய் எடுத்துக் கொண்டு வந்தனர். அந்த சமயத்தில் மைதானத்தில் இருந்த சஞ்சு சாம்சன், அவர்களுக்கு உதவி செய்து தார்ப்பாயை இழுக்கிறார். ஒரு பக்கம் அணியில் இல்லை என்ற சூழலில், சஞ்சு சாம்சன் செய்த இந்த உதவி, பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
Sanju Samson. 💗pic.twitter.com/QxtQMz4188
— Rajasthan Royals (@rajasthanroyals) November 27, 2022
இதே போல, மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமாரும் பணிபுரிந்து கொண்டிருக்கும் மைதான ஊழியருக்கு உதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
