சூப்பர்ஸ்டார் குரலில் "சுவாமியே சரணம் ஐயப்பா".. சபரிமலையில் ரஜினிகாந்த்.. இணையத்தை கலக்கும் அரிய வீடியோ!! THROWBACK
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திபெற்ற ஐயப்பன் திருக்கோவில். கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்கிய உடனேயே பக்தர்கள் சபரிமலைக்கு இருந்து சாமி தரிசனம் செய்ய துவங்குவார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டுகளுக்கான கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி திறந்து வைத்து தீபம் ஏற்ற, 18 ஆம் படிகள் வழியே ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கத் துவங்கி உள்ளனர்.
இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சென்றது தொடர்பான அரிய வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கடந்த 40 வருடங்களுக்கு மேல் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 2021 ஆம் ஆண்டு, தீபாவளி விருந்தாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாகி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக, நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதில் ரஜினியுடன் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' திரைப்படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் என்பதால் அவ்வப்போது ரஜினிகாந்தின் அரிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகும் போது மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகும்.
அப்படி தான், தற்போது கார்த்திகை மாதம் என்ற வேளையில் சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வரும் சமயத்தில், ரஜினிகாந்த் சபரிமலை சென்றது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்த வீடியோவிற்கு பின்னால் "சுவாமியே சரணம் ஐயப்பா" என ரஜினிகாந்த் சொல்வதும் இடம்பெறுள்ளது.
Also Read | திருமண நிகழ்ச்சியில் திடீர்ன்னு என்ட்ரி கொடுத்த 'சவப்பெட்டி'.. பதறிப் போன விருந்தினர்கள்!!.. பின்னணி என்ன??

மற்ற செய்திகள்
