‘இறந்தும் 14 பேருக்கு உயிர் கொடுத்த நபர்’.. நெகிழ்ச்சியடைய வைத்த மனைவியின் செயல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 27, 2020 05:21 PM

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 14 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.

Wife donate his death husband organs in salem

சேலம் ராஜாராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (50). இவர் மருத்துவக் காப்பீட்டு முகவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 19ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தார். விக்கிரவாண்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பின்னர் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சுரேஷ் மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க சுரேஷின் மனைவி முன்வந்ததை அடுத்து, தமிழ்நாடு உடல் உறுப்புதான ஆணையத்திடம் இதற்கான அனுமதி வாங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் சுரேஷின், இதயம், நுரையீரல், கண்கள், சிறுநீரகம், தோல், எலும்பு, மஜ்ஜை, கல்லீரல், கணையம் உள்ளிட்ட பாகங்கள் எடுக்கப்பட்டு பிற தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன. இதன்மூலம் 14 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Tags : #SALEM #ACCIDENT #ORGANSDONATE