'பாக்கெட்டில் இருந்தது 3 ரூபா'.. 'ஆனாலும் தவறவிட்டவரின் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு சேர்த்த நபர்'.. கடைசியாக கேட்ட நெகிழ்ச்சி உதவி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 04, 2019 01:20 PM

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவர் தன் பாக்கெட்டில் 3 ரூபாயே இருந்துள்ள நிலையில், தன் கையில் கிடைத்த முன்பின் தெரியாத நபரின் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை உரியவரிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

man with 3 rupees returns another mans rs.40,000 missed money

தனஜி ஜகதாலே என்கிற 54 வயது நபர் மகாராஷ்டிராவின் சதரா பகுதியில் பேருந்துக்குச் செல்ல கையில் பணமின்றி நின்றுள்ளார். ஆனால் அப்போது அவருக்கு யாருடைய பணமோ 40 ஆயிரம் ரூபாய் கிழே கிடந்தது புலப்பட்டுள்ளது. அந்த பணத்தை எடுத்துக்கொண்ட தனஜி சுற்றும் பார்த்து உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என எண்ணி நடந்துள்ளார். பலரிடமும் எதையாவது மிஸ் பண்ணிட்டீங்களா என அவர் கேட்டுள்ளார். அப்போது இன்னொருவர் மிகவும் முகவாட்டத்துடன் அதே பகுதியில் காணப்பட்டுள்ளார். அவரை விசாரித்தபோது அவருடைய மனைவிக்கு ஆபரேஷன் செய்வதற்கு 40 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்ததாகவும் அதனை மிஸ் பண்ணிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

உடனே தனஜி ஜகதாலே அவரிடத்தில் பணத்தை கொடுத்து அவரது முகத்தில் ஒளிர்ந்த சந்தோஷத்தை பார்த்து ஆனந்தமடைந்துள்ளார். இதனால் பணத்தை தவறவிட்ட அந்த நபர் மனமுவந்து 1000 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். ஆனால் அதை வாங்க மறுத்த தனஜி ஜகதாலே, தனது கிராமத்துக்கு போவதற்கு 10 ரூபாய் வேண்டும் என்றும், ஆனால் தன்னிடம் 3 ரூபாய் மட்டும்தான் பாக்கெட்டில் இருப்பதாகவும், 7 ரூபாய் கொடுங்கள் போதும் என்றும் கூறி வாங்கி பஸ் ஏறி சென்றிருக்கிறார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Tags : #MONEY