'உன்ன எனக்கு பிடிக்கல' என்றாள்.. 'கொன்று' உடலை 'டீ' தோட்டத்தில் வீசிவிட்டு வந்தேன் .. அதிரவைக்கும் பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 08, 2020 12:53 PM

கேரள மாநிலம் கொச்சி அடுத்த மரடு பகுதியை சேர்ந்த இளம்பெண் கோபிகா. இவர் பிளஸ் டூ படித்து கொண்டிருந்தார். இதையடுத்து கல்லூரி படிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

kill \'the body\' tea \'I threw in the garden.. incident of shaking

இந்நிலையில் ஜாபர் என்ற இளைஞர் கோபிகாவை காதலித்து வந்துள்ளார். இவர் மரடுவில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென கோபிகாவை காணவில்லை என்று அதிரப்பள்ளி போலீசாரிடம் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜாபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரைப் பிடித்து விசாரிக்கையில் முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்துள்ளார்.

ஆனால் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை உளறிக் கொட்டி விட்டார். தானும் கோபிகாவும் தீவிரமாக காதலித்து வந்தோம். ஆனால் ஒருகட்டத்தில் தன்னை பிடிக்கவில்லை என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்து அவரை கொல்ல திட்டமிட்டேன். கோபிகாவை காரில் அழைத்துச் சென்று திருச்சூர் அருகே கொலை செய்தேன். பின்னர் அவரது உடலுடன் காரில் தமிழகத்திற்கு சென்றேன்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே டீ தோட்டம் ஒன்றில் உடலை வீசி விட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்தார். உடனே அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றினர்.

அவரது உடலை போலீசார் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #LOVE #MURDER #KERALA