'கிளினிக் வர்றீங்களா?'.. 'போதை ஜூஸ் கொடுத்து'.. காதலனுக்கு 'கொடூர' தண்டனை!.. பெண் மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Dec 16, 2019 05:54 PM
கர்நாடகா பெங்களூரில் தன்னுடன் வாழ்ந்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் கடந்த நவம்பர் 2008-ஆம் ஆண்டு காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
லிவிங் டுகெதர் முறையில் பெங்களூரில் பெண் பல் மருத்துவர் சயீதா மற்றும் அவருடைய காதலர் மிர் அர்ஷத் அலி இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், மிர் அர்ஷத் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சயீதா தனது காதலர் அர்ஷத் அலியை கோரமங்களாவில் இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பின் 8வது மாடியில் இருந்த தனது டெண்டல் கிளினிக்கிற்கு பேசவேண்டும் என கூறி வரவழைத்துள்ளார்.
நம்பி போன அர்ஷத் அலிக்கு ஜீஸில் போதை மருந்தை கலக்கி கொடுத்துள்ளார் சயீதா. சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்த அர்ஷத்தின் பிறப்புறுப்பை சயீதா வெட்டியுள்ளார். இதற்கு தனது கிளினிக்கில் இருந்த உபகரணங்களை பயன்படுத்தியுள்ளார். இதுபற்றி அர்ஷத் அலியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சயீதா விசாரிக்கப்பட்டார். அர்ஷத் தனது கிளினிக்கில் இருந்து திரும்பும்போது விபத்துக்குள்ளாகியதால்தான் அவருடைய உடலுறுப்புகள் அடிபட்டு செயலிழந்ததாக சயீதா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதை விசாரித்த நீதிமன்றம், சயீதா கூறியது பொய் என்பதை கண்டுபிடித்ததோடு, தற்போது 42 வயதாகவும் சயீதாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், புத்திர பாக்கியத்துக்கு வழியின்றி ஆணுறுப்பை இழந்து சிகிச்சை பெற்று வரும் அர்ஷத் அலிக்கு நிவாரணமாக 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.