'அக்கா, தம்பி'யா பழகுறாங்கன்னு நினைச்சோம்'...'சிறுவன் கொடுத்த ட்விஸ்ட்'...அதிர்ந்து போன குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 30, 2019 10:34 AM

17 வயது சிறுவனை காதல் மயக்கத்தில் 26 வயது இளம் பெண் அழைத்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teenage Boy Elopes with 26 Year Old Woman in a Weird Love Story

மதுரையை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது அவனது தாத்தா வீட்டிற்கு அருகே வசிக்கும் 26 வயது பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கவனித்த சிறுவனின் வீட்டில் உள்ளவர்கள், இருவரும் அக்கா, தம்பி போல தான் பழகி வருகிறார்கள் என எண்ணியுள்ளார்கள். இதனால்  சிறுவன், இளம்பெண்ணுடன் பழகுவதை பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை.

இந்நிலையில் திடீரென இருவரும் மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. இதையடுத்து இருவீட்டினரும் பல இடங்களில் விசாரித்தபோது தான் இருவரும் வயது வித்தியாசம் இல்லாமல் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனது குடும்பத்தினர், அக்கா, தம்பி போல பழகுவதாக நினைத்து தானே சும்மா இருந்தோம், நிலைமை இப்படி ஆகிவிட்டதே என எண்ணி உடைந்து போனார்கள்.

இதையடுத்து சிறுவனின் குடும்பத்தினர் கரிமேடு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் மற்றும் அந்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். காதல் கண்ணை மறைக்கும் என்ற கூற்றிற்கு இணங்க, 26 வயது இளம் பெண் சிறுவனை அழைத்து சென்ற சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #MADURAI #LOVE #LOVE STORY #TEENAGE BOY #WEIRD