'அண்ணன், அண்ணிக்கு கொழந்த பொறந்தாச்சு.. கொஞ்ச நாள்ல'.. 'உயிரோடு எரித்து ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 25, 2019 04:23 PM

பஞ்சாப் மாநிலத்தின் மன்சா மாவட்டத்தில் சூரத் சிங் எனும் 55 வயதான நபருக்கு 2 மகன்கள். மூத்த மகன் குல்வீந்தர் சிங், சில வருடங்களாகவே பக்கத்து வீட்டில் இருந்த ஜஷான் ப்ரீத் என்பவரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவீட்டாரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு வேறொரு ஊரில் இருந்து வந்துள்ளனர்.

youth lost his younger brother after he marries girl he loved

இப்படி வருடம் போக, தம்பதியர்க்கு குழந்தை பிறந்தது. அப்போதுதான் தன் அண்ணன் குல்வீந்தர் சிங்கிற்கு பிறந்த குழந்தையைக் காண வந்த ஜஸ்ப்ரீத் சிங், அண்ணனையும் அண்ணியையும் குழந்தையையும் விரைவில் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்துள்ளார்.

மீண்டும் தன் ஊருக்கு திரும்பிய ஜஸ்ப்ரீத் சிங், தனது அண்ணியின் அண்ணனான ஜஷான் ப்ரீத்திடம் சென்று, தனது அண்ணனுக்கும், அண்ணிக்கும் குழந்தை பிறந்ததாகவும், விரைவில் அவர்களை குழந்தையுடன் தங்களது வீட்டுக்கு அழைத்துவரவுள்ளதாகவும் வெகுளியாகக் கூறி, கிண்டல் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜஷான், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜஸ்ப்ரீத் சிங்கை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

அங்கு ஜஸ்ப்ரீத் சிங்கை துன்புறுத்தியதும் அல்லாமல், பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பியுள்ளார். அங்கிருந்த சிலர் ஜஸ்ப்ரீத் சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் போகும் வழியிலேயே ஜஸ்ப்ரீத் சிங் உயிரிழந்தார்.

Tags : #HONOURKILLING #LOVE