‘ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரவுடி..’ பட்டப்பகலில் சாலையில் நடந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 07, 2019 06:57 PM

புதுக்கோட்டையில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rowdy brutally killed by gang in pudukkottai

கொலை செய்யப்பட்ட சுரேஷ் பாண்டி என்பவர் மீது புதுக்கோட்டை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதாகி சிறையில் இருந்தவர் சமீபத்தில்தான் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், சுரேஷ் பாண்டி தனது நண்பர் ஆனந்துடன் காலை நடைப்பயிற்சிக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் கத்தி மற்றும் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் சுரேஷ் பாண்டி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் ஆனந்த் அரிவாள் வெட்டால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸார் உயிரிழந்த சுரேஷ் பாண்டி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரவுடி ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ROWDY #MURDER