‘குழந்தையின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற தாய்..’ தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த கொடூரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | May 28, 2019 02:28 PM

திண்டுக்கல் அருகே மணிமேகலை என்பவர் அவரது மகள்  யாழினி (9) தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

mother kills 9 year old daughter with heavy stone while sleeping

இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னாளப்பட்டியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு இரண்டு குழந்தைகளுடன் வந்துள்ளார் மணிமேகலை. இரவு அழுதுகொண்டிருந்த இரண்டாவது குழந்தை யாழினியை சமாதானம் செய்து தூங்க வைத்துள்ளார். பின்னர் திடீரென அம்மிக்கல்லை எடுத்து வந்து குழந்தையின் மீது போட்டதாகக் கூறப்படுகிறது. இதில் முகம் மற்றும் கை உள்ளிட்ட பாகங்கள் சிதைந்து யாழினி உயிரிழந்துள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த மணிமேகலை கணவரை இழந்தவர். சற்று மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அவர் இறந்த குழந்தையின் அருகில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்துள்ளார். கைது செய்து அழைத்துச் சென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MOTHER #DAUGHTER #MURDER