‘கேட்டில் கட்டி வைத்து எரித்துக் கொலை..’ தேனியில் இளைஞருக்கு நடந்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 06, 2019 02:52 PM

தேனியில் இளைஞர் ஒருவர் கட்டி வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

man found tied up burnt to death in Theni

தேனி மாவட்டம் போடியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ளது பாதாளசாக்கடை திட்ட கழிவுநீர் உப உந்து நிலையம். அதன் கேட் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததால் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது கேட்டில் ஒருவர் கட்டி வைத்து எரிக்கப்பட்டுள்ளதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர் போலீஸாருக்கு தகவல் தர, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கருகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டுள்ளனர்.

எரித்துக் கொல்லப்பட்ட நபர் 30 வயது இளைஞராக இருக்கலாம் எனவும் அருகில் ரத்தம் சிந்திக் கிடப்பதால் கடுமையாகத் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கிடைத்த பர்ஸ், ஏடிஎம் அட்டைகளை வைத்து அவர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த இடத்திற்கு அருகே டாஸ்மாக் மதுக்கடை ஒன்று இருப்பதால் குடிபோதையில் நடந்த தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. கொலை செய்தவரைப் பிடிக்க துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : #MURDER #BURNTTODEATH