‘செங்கல் சூளை அருகே எரிந்த நிலையில் கிடந்த சிறுமி..’ நடந்ததைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 29, 2019 07:36 PM

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

14 year old girl raped and burnt to death in UP

கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிறுமி பக்கத்தில் செங்கல் சூளை அருகே ஒரு அறையில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்கள் மகளை யாரோ கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நடந்துமுடிந்த பிரேதப் பரிசோதனையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. தீப்பற்றி எறிந்ததுடன் மூச்சுத்திணறல் காரணமாகவும் தான் சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் கை, கால்களில் கயிற்றின் தடம் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்படாமல் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயற்சிப்பதாக சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறும்போது, “நாங்கள் வந்து பார்த்தபோது அவள் எரிந்த நிலையில் கிடந்தாள். என் மகள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. மின்சார வசதி இல்லாத அறையில் யாரோ கொலை செய்துவிட்டு விபத்து போல மாற்ற முயற்சிக்கின்றனர்” எனக் கூறியுள்ளார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பற்றிய தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் போலீசார் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #GIRL #MURDER #UP