‘வேறு பெண்ணுடன் நடனமாடியதால்’ தகராறு.. ‘கோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்..’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | May 27, 2019 09:34 PM

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த கஷுராம் (60) என்பவர் மனைவி பிஹாலி (50) உடன் ஏற்பட்ட தகராறில் அவரை கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

60 year old man kills wife with an axe in fight over dancing

சம்பவத்தன்று இருவரும் திருமணம் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கு நடன விழாவில் கஷுராம் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதைப் பார்த்த பிஹாலி கோபமடைந்துள்ளார். திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேறு பெண்ணுடன் நடனமாடியதைப் பற்றிக் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் போது கோபமடைந்த கஷுராம் அருகில் இருந்த கோடரியால் பிஹாலியைத் தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் பிஹாலியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவர்களின் வளர்ப்பு மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கஷுராம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : #HUSBAND #WIFE #MURDER #AXE